இலங்கை கல்வித்துறையில் அறிமுகமாகவுள்ள இரு புதிய திட்டங்கள்
இலங்கையின் கல்வித் துறையில் கணிசமான ஊக்கத்தை அளிக்கும் வகையில் இரண்டு முக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று (24.06.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க நாட்டின் கல்வித் துறையில் இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
விரிவான திட்டம்
முதலாவதாக, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் கேம்பிரிட்ஜ் காலநிலை குவெஸ்ட் திட்டத்தின், 8 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சுய கற்கை பாடநெறி விரைவில் அனைத்து இலங்கை மாணவர்களுக்கும் இலவசமாக கிடைக்கும்.
மூன்று தேசிய மொழிகளிலும் வழங்கப்படும் இந்த விரிவான திட்டம், பருவநிலை மற்றும் நிலைத்தன்மை குறித்த அத்தியாவசிய அறிவை இளம் மாணவர்களுக்கு வழங்கவுள்ளது.
மேலும், இந்த கற்கை நெறி முடிந்ததும் மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் சான்றிதழைப் வழங்கப்படும்.
அதேவேளை, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிக ஆய்வுகள்/ மேலாண்மை, நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கும் திட்டம் அறிமுகமாகவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |