க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasunadara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இந்த வாரத்திற்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும். அவ்வாறு இல்லாவிடில் இந்த வாரம் முடிவடைந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் முடிவுகள் வெளியிடப்படும்.
பரீட்சை விண்ணப்பதாரர்கள்
மேலும், சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கயே ஆன இந்த குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிட இருப்பதை கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த ஆண்டு 3527 மையங்கள், 535 ஒருங்கிணைப்பு மையங்கள் மற்றும் 33 வட்டார சேகரிப்பு மையங்களில் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் 452, 979 பேர் தோற்றியிருந்தனர்.
மேலும், இவர்களில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
