மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு
மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தில் திருத்ங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக கருத்துக்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதி வரையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொது மக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார கட்டணம்
மேலும். மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள யோசனைகள் அண்மையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த முன்மொழிவுகளில் மின்சார கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை எவ்வளவு தொகையால் குறைப்பது என்பது குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலங்களாக மின்சார கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
