கிளிநொச்சியில் வீடு மீது தாக்குதல் : பல இலட்சம் சொத்துக்கள் நாசம்...!
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (22.06.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்று்ளளது.
விசாரணைகள்
வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்து வந்த நிலையில் மகள் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பதற்காக சென்றிருந்த நிலையில் தாயார் அருகில் உள்ள வீடு ஒன்றில் இரவுவேளைகளில் பாதுகாப்பு கருதி உறங்குவது வழமையாக இருந்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்று முன்தினம் குறித்த வீடு அடித்து நொருக்கப்பட்டு வீட்டின் சில பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டு பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உரிமையாளர் ராதா அழகேஸ்வரி என்பவராவார்.
இதேவேளை, நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளானவரது மகனது வீடும் கடந்த வருடம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
