இலங்கையில் யுத்த காலத்தில் பிரித்தானியாவின் செயற்பாடுகள்! வெளிவரும் தகவல்கள்
இலங்கையில் யுத்த காலத்தில் யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக பிரித்தானியா முழு மனதாக செயற்படவில்லை என சட்டவாளர் அருண் கனநாதன் தெரிவித்துள்ளார்.
செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படும் போது பிரித்தானியாவினதும், ஊடகங்களினதும் அரசியல் நிலைப்பாடு எமக்கு சாதகமாக இருக்காத நிலையில் அவர்கள் ஒரு துளி அக்கறை கூட காட்டவில்லை.
மக்கள் எண்ணிக்கை இழப்பு என கூறும் போது இலங்கையில் எத்தனையோ மடங்கு மக்கள் இறந்தார்கள். வெறுமனே தமிழர்கள் போராடியதற்காக அந்த சிறிய அரசியல் அழுத்தத்திற்காக தான் பிரித்தானியா சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தது.
யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக பிரித்தானியா முழு மனதாக செயற்படவில்லை என கூறியுள்ளார்.