திமுக -அதிமுக அல்லாத ஒரு கட்சி..!! விஜய்க்கு சீமான் வாழ்த்து..
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சற்று நேரத்தில் பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து சீமான் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
“தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 10, 2026
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.@TVKVijayHQ
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam