ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE
புதிய இணைப்பு
ஜோசப் விஜய் எனும் நான்.. என்ற வரிகளோடு முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றார் விஜய்.
இதன்போது, இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரங்கமே அதிரும் வகையில் ஆர்ப்பரித்தனர்.
தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.
தொடர்ந்து அமைச்சர்களது பொறுப்பேற்பு நிகழ்வு, சத்தியப்பிரமாண நிகழ்வு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து முக்கிய கோப்புக்கள் சிலவற்றில் விஜய் கையெழுத்திட உள்ளார். பின்னர், ஆளுநரை வழியனுப்பியப் பிறகு முதலமைச்சராக மக்களிடத்தில் உரையாற்றவுள்ளார்.
நான்காம் இணைப்பு
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்னும் சற்று நேரத்தில் விஜய் பதவியேற்கவுள்ள நிலையில், விழா மேடைக்கு சற்று முன்னர் அவர் வருகைத் தந்துள்ளார்.
அவரோடு இணைந்து இந்திய பராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் மேடைக்கு வருகைத் தந்துள்ளார்.
இரசிகர்கள், ஆதரவாளர்களின் பெரும் ஆர்ப்பரிப்போடு இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கின்றார்.
மூன்றாம் இணைப்பு
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழா நடைபெறும் இடத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
அவரை த.வெ.க. தலைவர் விஜய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
இரண்டாம் இணைப்பு
முதலமைச்சராக பதவியேற்புக்காக நேரு உள் விளையாட்டரங்கிற்கு வருகைத் தந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
சம்பிரதாயப் பூர்வமான வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தியோகபூர்வ அமைச்சரவைப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

#WATCH | TVK Chief C Joseph Vijay arrives at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu shortly.
— ANI (@ANI) May 10, 2026
(Source: TN DIPR) pic.twitter.com/4UvuSfAGxj
முதலாம் இணைப்பு
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் நீலாங்கரை வீட்டிலிருந்து நேரு அரங்கினை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜயும், அவருடைய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பிற்காக 6 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சாலையோரங்களில் நின்று மக்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்திய பராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வருகைத் தந்துள்ளார்.
இந்தநிலையில், தன்னுடைய மகனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ள விஜயின் பெற்றோர், தாம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக அறிவித்துள்ளனர்.
#WATCH | Tamil Nadu: TVK Chief and CM-designate Vijay leaves from his residence.
— ANI (@ANI) May 10, 2026
He will take oath as the Chief Minister of Tamil Nadu today at Jawaharlal Nehru Stadium in Chennai.
(Source: TN DIPR) pic.twitter.com/Cydz5VkjfC
#WATCH | Tamil Nadu: Visuals from the Jawaharlal Nehru Stadium in Chennai, where TVK Chief Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu today. pic.twitter.com/4uRlOwnOgC
— ANI (@ANI) May 10, 2026
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan