நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீதான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஒருகொடவத்தை, பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகளை ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு
ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி ஒருகொடவத்தையில் உள்ள பேஸ்லைன் வீதியில் ஏற்பட்ட விபத்து மற்றும் தாக்குதல் தொடர்பான வழக்கில், பிரதிவாதி தரப்பின் சாட்சியங்களை விசாரிப்பதற்கான திகதி இன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பிற்காக முன்னிலையாகும் வழக்கறிஞர், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தமக்கு ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக இயலவில்லை என்று கூறி, வழக்கிற்கு ஒரு மாற்று திகதி கோரியுள்ளார். மேலும், தமது கட்சிக்காரர் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் செல்ல வேண்டியிருப்பதால், வேறு ஒரு திகதியை வழங்குமாறு பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
இதற்கமைய, உண்மைகளை கருத்தில் கொண்ட நீதவான் பிரதிவாதி தரப்பின் சாட்சியங்களைக் கேட்பதற்காக ஜனவரி 5 ஆம் திகதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
சற்றுமுன்னர் மூன்று பேருந்துகள் மோதி கோரவிபத்து! 5 பேர் பலி - பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
ஈரானியர்களுக்கு வழங்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகள்... அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் அதிகரிப்பு News Lankasri