இலங்கையில் இன்று டொலர் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வங்கிகளின் புதிய விபரங்கள்!
இலங்கைய வர்த்தக வங்கிகளில் நேற்றையதினத்துடன்(09.11.2026) ஒப்பிடுகையில், இன்றையதினம்(10.11.2026) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுச் செய்துள்ளது.
கமர்ஷல் வங்கியின் இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே, 326.58 மற்றும் 336.59 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய பெறுமதி
அத்துடன், மக்கள் வங்கியின் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே, 328.20 மற்றும் 336.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

செலான் வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை, 328.15 ரூபாவாகவும் விற்பனை விலை 337.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், சம்பத் வங்கியின் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே, 328.50 மற்றும் 336.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.