சற்றுமுன்னர் மூன்று பேருந்துகள் மோதி கோரவிபத்து! 5 பேர் பலி - பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ரம்பேவ பிரதேச வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இன்று காலை (10) இடம்பெற்ற கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலாம் இணைப்பு
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.







வீட்டில் தனியாக இருந்த யுவதி சடலமாக மீட்பு! வங்கிக்கு சென்று திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan