தேர்தல் விசேட நடவடிக்கை: களமிறக்கப்படும் பாதுகாப்பு படையினர்!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பாதுகாப்பிற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா(Nihal thalduwa) தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு குழுவில் 63,145 பொலிஸ் அதிகாரிகளும், 3200 விசேட அதிரடிப் படையினரும், 11,000 இராணுவத்தினர் உள்ளடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவத்தினர் தேவைக்கேற்ப பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிவில் பாதுகாப்பு
இதன்படி 12,227 சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் நடமாடும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
மேலும் வாக்களிப்புக்கு பின்னர், பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 3109 நடமாடும் கண்காணிப்பு படையினரும், 269 வீதித் தடைகளும், 241 கலகம் அடக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |