நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு(Nimal Siripala de Silva) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவின் பதவி காலத்தில் காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள ஆறு நடமாடும் கடைகளில் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்த வர்த்தகர்கள் அகற்றப்பட்டு அவர்களது ஆதரவாளர்களுக்கு வியாபார அனுமதி வழங்கப்பட்டதாக பிரதீப் சார்ள்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கமைய பல வருடங்களாக அந்த இடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் கடும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோத செயல்
எனவே இந்த சட்டவிரோத செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கடைகளை வியாபாரிகளிடம் மீட்டுத் தர அரசிடம் கோரிக்கை விடுக்கவள்ளதாகவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri