பாதுகாப்புச் செலவுகளை உடன் குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரவில்லை! ரணில்
பாதுகாப்புச் செலவுகளை உடனடியாக குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவ செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளமை உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், செலவு குறைப்பினை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படை வீரரர்கள்
இராணுவத்தில் கடமையாற்றி வரும் படைவீரர்களை வீட்டுக்கு போக செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரை வேறு துறைகளில் ஈடுபடுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.
ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பதவிக் காலம் பூர்த்தியாகும் வரையில் ஆட்சியில் நீடிக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
