கொழும்பிலுள்ள அலரி மாளிகைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டத்திற்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு மாநகரசபையினால் வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் நேற்று அகற்றப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களுக்காக 2005ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக இந்த வீதி மூடப்பட்டது.
பாதுகாப்பு நிலைமை
நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட இந்த வீதியை தற்போதைய பாதுகாப்பு நிலைமையை ஆராயப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் திறக்குமாறு புதிய அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
இந்த முடிவினால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்தை எளிதாகுவதுடன், பொதுமக்களுக்கு அதிக வசதியும் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri