கோவிட்-19 வைரஸ் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு விழிப்பூட்டல் கூட்டம்

Corona virus Batticaloa Meeting
By Navoj Apr 26, 2021 12:09 PM GMT
Report

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ரமழான் காலத்தில், பொதுமக்களின் கோவிட் வைரஸ் பாதுகாப்பு கருதி அவசர கூட்டம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் தற்போது கோவிட் வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் காரணமாக கோவிட் தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்பட்டு வருகின்றது. இதையிட்டு இன்று இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, முஸ்லிம் சமூக பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.சியாத், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மே 31 வரை கோவிட் வைரஸ் பரவலின் மூன்றாவது நிலை ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை அத்தியாவசிய சேவைகளைத் தவிர பல் அங்காடிகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50வீதமாகப் பேணுதல், ரமழான் காலம் என்பதால் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு 50 பேருக்கு அனுமதி, உணவகங்களில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதம் அனுமதி, மரண வீட்டில் உச்ச பட்சம் ஒரு தடவையில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி, பொதுமக்கள் ஒன்று கூடலுக்கு அனுமதி இல்லை, களியாட்டங்கள், இசை நிகழ்வுகள், கடற்கரை விருந்துபசாரங்கள் மூடப்பட்டிருக்கும், நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டிருக்கும் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தற்போது ரமழான் காலமாக உள்ள நிலையில் கோவிட் வைரஸ் தாக்கம் மீண்டும் பிரதேசத்தில் பரவாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அத்தோடு பள்ளிவாசல்களில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு தொழுகை முற்றாகத் தடை செய்யப்படும் எனவும் வெளி இடங்களிலிருந்து வருகை தந்தால் சுகாதார திணைக்களத்திடம் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரமழான் காலம் என்பதால் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கோவிட் வைரஸ் தாக்கம் பரவாத நிலையில் நடந்து கொள்ள வேண்டும், சுகாதார விதிமுறைகளை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US