தமிழ் மக்களை உடைப்பதில் இரகசிய நகர்வுகள்!
இலங்கை தமிழர்கள், உள்நாட்டு போர் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தமது உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறை தேர்தல்கள் நடைபெறும் போதும் அவர்களுக்கான உரிமைகளை பெற்று தருவதாக பல அரசியல் தலைவர்கள் வாக்கு கொடுக்கின்றனர்.
ஆனால் இதுவரை யாரும் தமிழர்களின் நிலை குறித்து உண்மையான கரிசனை காட்டவில்லை.
இந்நிலையில் அநுரகுமார ஜனாதிபதியாக அரசியலுக்குள் நுழையும் போது, தமிழ் அரசியல் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு அநுரவின் கட்சியை சார்ந்தவர்கள் யாழில் அதிக வாக்குகளை பெற்றனர்.
அதன்பின்னர் இப்போது உள்ளூராட்சி தேர்தலை அடிப்படையாக கொண்டு பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்களை உடைப்பதில் எவ்வாறான இரகசிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்து, அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு இன்றைய ஊடறுப்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு முழுமையாக காணலாம்...,