அறுகம்பை விவகாரத்தில் நடக்கும் இரகசிய கைதுகள்
அம்பாறை, பொத்துவில், அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள உளவுத்தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அறுகம்பேவை மையப்படுத்தி 500 இற்கும் அதிகமான பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சிறப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச்சோதனை சாவடிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்களும், அமெரிக்கர்களும் பெருமளவு ஹோட்டல்களையும், காணிகளையும் வாங்கி குவித்துள்ள நிலையில், அச்சுறுத்தல் செய்தி வெளியான உடன் தற்போது கொழும்பினை நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் செய்தி முற்றுமுழுதாக சோடிக்கப்பட்ட பொய் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுமாயின் நிச்சயமாக அமெரிக்கா, மொசாட்டும் பின்னணியில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் வேளையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த செய்திகள் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், அறுகம்பை பகுதி சர்வதேச நாடுகளினால் விரைவில் கைப்பற்றக்கூடிய இடம் என்பதனால், அவை திட்டமிடப்பட்டு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
அறுகம்பை விவகாரம் தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் வெளியிட்ட உண்மைகளை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
