புலனாய்வு தகவலை அடுத்து விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கை பிரஜைகள் அனைவரது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு தகவல்
மேலும், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்படும் பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விரைவாகச் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இலங்கையில் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் தற்போது உறுதி செய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan