வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகிய நாமல்: வெளியாகிய காரணம்
வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தாம் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் வாக்களிப்பில் இருந்து விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு நிவாரணம் வழங்க தாம் முன்வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சாத்தியமற்ற முன்மொழிவு
மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சாதக மற்றும் பாதக அம்சங்களைக் கொண்டுள்ளது சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது.
கடந்த முறை முன்வைக்கப்பட்ட அதாவது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையே இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்காக முன்னிறுத்தி அவர்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் செயற்படுவது தனது கடமையாகும்.
மேலும், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
