கடலட்டைப் பண்ணைகளை விமர்சிப்பது போக்கற்றவர்களே..! அமைச்சர் டக்ளஸ் விசனம்
போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை விமர்சிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர் வெளியிடும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எமது மாவட்டங்களில் காணப்படும் வளங்களை பயன்படுத்தி அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் நோக்ககோடு, சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்து கடலட்டை பண்ணைகள் நடாத்தப்படுகின்றன.
அமைச்சரின் சவால்
இவற்றை எழுந்தமானமாக சிலர் விமர்சிப்பதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபித்து காட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri

19 ஆண்டுகள் நிறைவு பெற்ற அஜித்தின் திருப்பதி படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
