வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கஜேந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெடுக்குநாறி மலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் இன்று (13.03) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரக்தி அடைந்த 8 அப்பாவிகளும் சிறைச்சாலையில் பெரும் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.
அதில் 5 பேர் நேற்று காலை முதல் உணவை எடுக்க மறுத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். இதன்காரணமாக, அவர்களது குடும்பங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |