இலங்கையில் தலைமறைவாகியுள்ள ஸ்கொட்லாந்து பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கையின் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்று போராட்டங்களை நேரலை செய்த பிரித்தானிய-ஸ்கொட்லாந்தின் பெண், அவர் வெளிவராத இடம் ஒன்றில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் இணையம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்று போராட்டங்களை நேரலை செய்தமைக்காக விசாரணை செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
கடவுச்சீட்டு இல்லை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,“தன்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்றும், பணம் மிகவும் குறைவாக உள்ளது.
மேலும், நான் யாரையும் நம்பவில்லை என்றும் சோர்வடைந்து, குற்றவாளியை போன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். என்னை கைது செய்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
நான் பயப்படுகின்றேன்
ஏற்கனவே அவர்கள் காட்டியுள்ள செயல்களால், அவர்களின் காவலில் இருப்பதற்கு நான் பயப்படுகின்றேன். நான் எப்படி நாட்டை விட்டு வெளியேற முடியும் என்பது தொடர்பில்பயப்படுகின்றேன்.
துப்பறிவோர்,நான் இருக்கும் இடத்தைக் கண்காணிக்க பயன்படுத்தலாம் என்ற சந்தேகத்தில் எனது தொலைபேசியிலிருந்து சிம் அட்டையை அகற்றியுள்ளேன்.
இந்தநிலையில் இந்த மாத இறுதியில் எனக்கான வழக்கு இடம்பெறும் போது என்னுடைய
ஆவணங்கள் கையளிக்கப்படும் என்றும் நான் நாடு திரும்ப முடியும் என்றும்
நம்புகின்றேன்.”என கூறியுள்ளார்.
