பகிரங்க மன்னிப்பு கோரிய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
பீட்டர் மண்டெல்சனை அமெரிக்காவிற்கான தூதராக நியமித்த தனது முடிவிற்காக வருத்தம் தெரிவித்துள்ள அவர், மண்டெல்சனின் "பொய்களை" தான் நம்பி ஏமாந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் தணிக்கையின் போது, எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை மறைத்து, அவரை தமக்கு ஓரளவே தெரியும் என்று மண்டெல்சன் பொய் கூறி திசைதிருப்பியதாக பிரதமர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பு
இந்த நியமனம் காரணமாகத் தனது சொந்தக் கட்சி (தொழிற்கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தையும் ஏமாற்றத்தையும் தான் உணர்வதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது ஸ்டார்மரின் அரசியல் எதிர்காலம் பெரும் ஊசலாட்டத்தில் உள்ளதாக பிபிசி அரசியல் ஆசிரியர் கிறிஸ் மேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் பதவி விலகுவது எப்போது என்பது மட்டுமே எஞ்சியிருக்கும் கேள்வி என எதிர்க்கட்சித் தலைவி கமி பேடனோக் விமர்சித்துள்ளார்.
தொழில்தூதராக இருந்த மண்டெல்சன் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும், தாம் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது. இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.