மாணவர்கள் தொடர்பில் சுகாதார துறை விடுத்துள்ள எச்சரிக்கை
கடுமையான சூரிய ஒளி மற்றும் வறண்ட வானிலை காரணமாக மாணவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறி்த்த எச்சரிக்கையை குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளி காரணமாக குழந்தைகள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்ப அழுத்த அபாயம்
குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த நிலையைத் தவிர்க்க முடிந்த வரை தண்ணீரைக் குடிப்பது மற்றும் வலுவான சூரிய ஒளியில் நேரடியாக நடமாடுவதை தவிர்ப்பது சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |