கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை: அரசாங்க அதிபர் அறிவிப்பு
தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னராக நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 57 நபர்களைக்கொண்ட 27 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அவர்களிற்கான உடனடி உலருணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக செய்யப்பட்டுள்ளது.
கனத்த மழை பெய்து வருவதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலவுகின்ற காலநிலையினை பொறுத்தே விடுமுறையை நீடிப்பதா இல்லையா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் என மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி..........
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை! - அரசாங்க அதிபர் விசேட அறிவிப்பு



