பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு!
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்றையதினம்(10.3.2026) கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டணங்கள் அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்ட போதிலும், போக்குவரத்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி, இன்று முதல் போக்குவரத்து சேவைக் கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார்.
நேற்று(9.3.2026) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam