பேருந்தில் தனியாக பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!
பேருந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கந்தானை நோக்கி சென்ற பயணிகள் போக்குவரத்து பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவியை, விசேட அதிரடிப்படை அதிகாரி, முன்னாள் கடற்படை சிப்பாய் சேர்ந்த இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய் களுபோவில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை சிப்பாய் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சந்தேகநபர்களை நேற்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜா-அல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
