கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் தந்தை: விசாரணையில் வெளியான தகவல்
மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14 , 2023 அன்று, கல்மட்ட, வெலிப்பன்ன வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற மூன்று பாடசாலைச் மாணவர்களை எச்சரித்த 34 வயதுடைய டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் ரங்காவை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொலிஸார் விசாரணை
இந்நிலையில், அவரின் கல்லறையை சுத்தம் செய்து தினமும் விளக்குகளை ஏற்றி வரும் நிலையில், திடீரென சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri