பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கைத் தமிழர்: எழுந்துள்ள கண்டனம்
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த தமிழர் தொடர்பில் தீவிர கேள்விகளை எழுப்பவேண்டும் என லண்டனில் உள்ள தமிழ் சொலிசிட்டர் ஜெனரல் நா. கந்தையா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்டு உயிரிழந்த சுதர்சன் இதயசந்திரன் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறியுள்ளார்.
"உள்துறை அமைச்சின் தாமதங்கள் குறித்த நீதிமறு ஆய்வினை முன்னெடுத்ததை தொடர்ந்தே அதிகாரிகள் சுதர்சன் இதயசந்திரனிற்கு மீண்டும் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
மன அழுத்த நோய்
அதற்காக மன்னிப்பு கடிதமொன்றையும் வெளியிட்டனர். அந்த கடிதத்தில் தாமதங்களிற்கு அதிகாரிகள் காரணமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே 19 ம் திகதி இலங்கையில் இதயசந்திரன் தங்கயிருந்த இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் உயிரிழந்தார்.
செப்சிஸ் என்ற மன அழுத்த நோய் காரணமாகவே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து இருந்ததால் அவர் மன உளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என தெரிவித்துள்ளதோடு, அவர் ஒழுங்காக உணவருந்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சே காரணம்
அவரது குடும்பத்தினர் இதிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றனர் என்பது தெரியவில்லை.
உள்துறை அமைச்சு அவரை நாடு கடத்தாவிட்டால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என கருதுகின்றேன். அவரின் மரணத்திற்கு உள்துறை அமைச்சே காரணம் என குற்றம்சாட்டுகின்றோம்.
உள்துறை அமைச்சு இதயசந்திரனை மிகவும் நியாயமற்ற விதத்தில் நடத்தியுள்ளது. அவருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் அவர் மனமுடைந்தவராக காணப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பவேண்டும். பிரிட்டனில் வசிப்பதற்கான தெளிவான உரிமை உள்ளபோது ஏன் சுதர்சன் நாடு கடத்தப்பட்டார்? நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏன் உள்துறை அமைச்சு மந்தகதியில் செயற்பட்டது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |