பாடசாலைகளின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடும் மோதல்
பண்டாரவளையில் உள்ள இரண்டு பாடசாலைகளின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இவ்வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையிலேயே இவ்வாறு (21.05.2023) மோதல் ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மாணவர்களில் ஒருவர் செல்போனில் பதிவு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் எனவும், கணித கருத்தரங்கில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினருக்கிடையில் காணப்பட்ட பழைய தகராறே இந்த மோதலுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர் ஒருவரும் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |