பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தாக மாறும் போக்குவரத்து! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வான்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
பயணிகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய பொருத்தமற்ற நிலையில் உள்ள வாகனங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படவுள்ளது. அதனையும் மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், பாடசாலைகளின் தனியார் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன.
இதற்கமைய சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மேலும் பாடசாலைகளின் தவணைக்கான அந்த மூன்றாம் கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.



