பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன்
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (21.09.2025) இரவு உடப்புசல்லாவ -நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதி
ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவர்.
இருப்பினும் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri