முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்
ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் இதுவரை மீட்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்
அதன்படி, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மருத்துவ சிகிச்சை வசதிகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு முன்னாள் பிரதமருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்பட்ட ரூ. 24,657,015 தொகையானது, மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய தணிக்கைச் சட்டத்தின் பிரிவு 12 (j)-இன் படி மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வுகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ரூ. 10,908,798 (ஏப்ரல் 04, 2012 அன்று) மற்றும் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட ரூ. 13,748,217 ஆகிய தொகைகள் மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam