முன்னாள் ஆளுநர் மஹீபாலவின் சட்டவிரோத ஹோட்டலை இடிக்க அறிவித்தல்
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் அறுபது பேர்ச்சர்ஸ் காணியில் அமைத்துள்ள கட்டடம் என்பவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுநரின் மனைவி அஜந்தா ரெபசரி ஹேரத்துக்கு கடிதம் ஊடாக நுவரகம் பலாத்த பிரதேச செயலாளர் சுதர்ஷன திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல்
அரசாங்க கொள்கை முடிவாக, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லை நிர்ணயத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் தற்போது தொடங்கியுள்ளது.
அதன்படி, பெரமியன்குளம வனப்பகுதியை எல்லை நிர்ணயம் செய்யும் போது, எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக ஹோட்டல் கட்டப்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில், அதை இடிக்குமாறு முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டதாக சுதர்ஷன திசாநாயக்க கூறினார்.
தற்போது, பெரமியன்குளம் வனப்பகுதியில் அனைத்து அளவீட்டுப் பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன் எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 17 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
