மட்டக்களப்பில் திடீரென மயங்கி விழுந்த மாணவி பரிதாப மரணம்!
மட்டக்களப்பு - கிரான்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
16 வயதுடைய மாணவி ஒருவரே இன்றையதினம் மதியம் 12.30 மணியளவில் வகுப்பறைக்குள் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மயங்கி விழுந்த மாணவியை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த மாணவி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயங்கிவிழுந்த மாணவி
கிரான்குளம் 8ஆம் பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த, க.பொ.தர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரான் குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் குறித்த மாணவி வழமைபோல சம்பவதினமான இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்று அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனமதியை பெறும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam