தென்னிலங்கையில் அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு ஓடிய தம்பி
பாணந்துறை பிரதேசத்தில் தனது மூத்த சகோதரனை தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் தம்பி சரணடைந்துள்ளார்.
அதற்கமைய, சந்தேக நபரான தம்பியை கைது செய்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் தாக்குதல்
பின்வத்த மீகஹா கோவில வீதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், தம்பி தனது கையால் மூத்த சகோதரனின் தலையில் அடித்ததாகவும், தாக்கப்பட்ட மூத்த சகோதரர் தரையில் விழுந்து தலை மோதியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan