பரீட்சைக்கு சென்ற மாணவி மீது அமிலம் வீச முயன்ற இளைஞர்! நேர்ந்த விபரீதம்
கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேகாலை - பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவி மீது அமிலம் (அசிட்) வீச முற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்த மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியை மறித்து முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்த பாடசாலை மாணவியின் கழுத்தை நெரித்து அமிலம் வீச முற்பட்டுள்ளார்.
இதன்போது மாணவியின் தந்தை அமில போத்தலை பறித்து இளைஞன் மீது வீச முற்பட்ட சமயத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞர் தீக்காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கேகாலை - ஹெட்டிமுல்ல, உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும், அவரது 45 வயதுடைய தந்தையும், கேகாலை நகரில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
