முரசுமோட்டை முருகானந்த ஆரம்ப பாடசாலையின் புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்த ஆரம்ப பாடசாலையின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (23.02.2024) காலை வித்யால முதல்வர் க.கருணானந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில், கிளிநொச்சி வடக்கு வலய கல்வி பணிப்பாளர் க.அ.சிவனருள் ராஜா, கண்டாவளை கோட்ட கல்வி அதிகாரி ஆ.உதயணன் மற்றும் யாழ்ப்பாணம் புற்றளை மகா வித்தியாலயத்தினுடைய முதல்வர் ஞா. ரவிக்குமார் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டுள்ளனர்.
மதிப்பளிப்பு நிகழ்வு
நிகழ்வின் முன்னதாக பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்பு நிகழ்ந்துள்ளதோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளதோடு இதில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |