மட்டக்களப்பில் இடம்பெற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக்கல்வி வலயத்துக்குட்பட்ட போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்தில் உள்ள 33 பாடசாலைகளில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சுமார் 677 மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
களுதாவளையிலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் சமூக பொருளாதார கல்வி அபிவித்திச்சங்கத்தினால் நேற்று (22.02.2024) வழங்கி வைக்கப்பட்டன.
கற்றல் உபகரணங்கள்
களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவித்திச்சங்கம் கட்டாரில் தொழில் புரியும் உறவுகளின் பிரதான அனுசரணையில் வருடா வருடம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களை, அந்நிலையிலிருந்து மீட்டு பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்து தொடர்கல்வியை பெறுவதற்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்து.
இதன் ஐந்தாம் கட்டமானது வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலபாடசாலையின் கேட்போர் கூட்டத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறீதரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.அருள்ராஜா, கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






