பாடசாலை மீது விழுந்த மரத்தின் கிளை - உயிரிழந்த மாணவர் தொடர்பில் வெளியான தகவல்
பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த மாணவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பு படிக்கும் கிவிர ஹிருஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற 57 வயது தாயும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரத்தின் கிளை விழுந்த கட்டிடம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகும்.
பொலிஸார் விசாரணை
காயமடைந்தவர்களில் 6 மாணவிகளும் 11 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
