உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும்

Sri Lanka Politician Sri Lanka Local government Election
By T.Thibaharan Jun 09, 2025 11:35 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப்பின் தமிழ் அரசியல் பரப்பில் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகள், போட்டிகள், பொறாமைகள், சீரழிவுகள் அதிகரித்துள்ளன.

தமிழ்த்தேசியம் சீரழிவுக்கு உட்பட்ட தமிழ் அரசியல் தளத்தில் தலைமைத்துவ இடைவெளி என்பது நிரப்பப்படாமலும் நிரப்பப்படுவதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் தோன்றா நிலையில் ஒரு கூட்டுத் தலைமைத்துவத்தின் தேவையை தமிழ் மக்கள் உணர்ந்து இருக்கின்றனர்.

தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளும் உணர்ந்திருக்கின்றனர். இதன் விளைவுதான் இப்போது தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தமக்கடையிலான கூட்டுக்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது தமிழர் அரசியலில் கொள்கை ரீதியான, கருத்தியல் ரீதியான மாற்றம் ஒன்று ஏற்படத் தொடங்கி விட்டது என்ற சமிக்ஞையை காட்டுகிறது.

தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள்

இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளும் சுயநலன் சார்ந்தவை. ஜீவராதிகளின் வாழ்வு சுயநலத்தினாலேயே நிர்ணயம் பெறுகிறது.

சுயநலம் இல்லையேல் ஜீவராசிகள் இந்த பூமியில் வாழ முடியாது. அதற்குள் மனிதர்களும் உட்பட்டவர்களே. "பரிணாமவாத" கோட்பாட்டில் (Evoiution theory) டார்வின்(Charies Darwin) கூறும் தக்கன பிழைத்தல்(Survival of the fittest) என்பதும் டிக்கின்ஸ் (Richard Dawkins)கூறும் "சுயநல மரபனு கோட்பாடும்"(selfish gene theory) உயிரியல் வாழ்வதற்கான நலன்கள் தேவைகள் பற்றிய அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் | Local Election And Tamil Political

அந்த அடிப்படையில்தான் மனிதர்களும் தனித்தும் வாழ முடியாது. அதே நேரத்தில் சூழலுக்கு இசையாமல் அல்லது மாற்றம் அடையாமல் சூழலுக்கேற்ற தம்மை மாற்றிக் கொள்ளாமல் நிலைத்து வாழ்ந்திட முடியாது.

எந்தப் புனிதமான கொள்கைகளும், கோட்பாடுகளும், தத்துவங்களும், திட்டங்களும், முன்மொழிவுகளும் சமூகத்திற்கு நன்மை பயக்காவிட்டால் அவை வெறும் கற்பனைவாதங்களே. காலத்தின் தேவைக்கு ஏற்றவே இவை வகுக்கப்படுகின்றன.

காலத்துக்கு ஒவ்வாதவை வரலாற்றில் அழிந்து விடும்.இதனை நன்னூல் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" என்கிறது. உள்ள பொருள் ஒன்றே அந்த உள்ளதுலிருந்துதான் எதனையும் படைத்திட முடியும். உள்ளவற்றில் எவற்றை கழித்து, எவற்றை கூட்டி, எவற்றை இணைத்து புதியவற்றை உருவாக்குவதே அறிவியல் கூறும் வாழ்வியல் தத்துவமாகும்.

இது இப்போது தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையாக உள்ளது. கூட்டு முன்னணி தத்துவம் ஏன் தமிழ் அரசியலுக்கு தேவை? ஈழத் தமிழர் அரசியல் ஒரு நூற்றாண்டு காலம் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

சிங்கள தேசம் தமிழ் தலைமைகளையும், தமிழர்களையும் வெல்வதற்கு எப்போதும் கூட்டிச்சேர்ந்தே பயணித்திருக்கிறது.

சிங்கள தேசத்தில் எத்தனை கட்சிகள் வந்தால் என்ன, எத்தனை முரண்பாடு உடைய கட்சிகள் இருந்தால் என்ன தமிழ் மக்கள் உரிமை சார்ந்த போராடுகின்ற போது சிங்கள தேசத்தில் அனைத்து அரசியல் சக்திகளும் கூட்டுச்சேர்ந்து ஓர் அணியில் நின்று தமிழர்களை எதிர்த்தார்கள். அதனால் அவர்களால் தமிழர்களை தோற்கடித்தல் என்ற வெற்றிக்கனியை பறிக்க முடிந்தது.

ஆனால் தமிழர்கள் சாத்வீக போராட்டம் நடத்திய காலத்திலும் சரி, ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்திலும் சரி, ஐக்கியமாக ஒரே அணியில் கட்சி ரீதியாகவோ, இயக்க ரீதியாகவோ ஒன்றுபட்டு நிற்கவில்லை.

அதுவே தமிழர்களுக்கு தோல்வியை பரிசளித்தது என்ற உண்மையை வரலாறு இப்போது உணர்த்தியுள்ளது.

ஒன்றுபட்டு நிற்கவில்லை

ஒரு பெரும் யுத்தத்தை சந்தித்து பேரழிவை அறுவடை ஆக்கிய தமிழ்ச் சமூகம் இந்த பேரிழப்பிலிருந்து மீண்டெழுவதற்கும், தனக்கு ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவ இடைவெளியை நிரப்புவதற்கும் பிரிந்து கிடக்கின்ற அனைத்து தமிழ் தரப்பையும் கூட்டி கட்டி ஐக்கியப்படுத்துவது அவசியமானதாகும்.

ஐக்கியம் இன்றி தமிழ் மக்கள் எதனையும் எதிர்காலத்தில் சாதித்திட முடியாது. மேலும் இலங்கை தீவில் தமிழ் மக்கள் அளவால் சிறிய தேசிய இனம்.

ஆயினும் தமிழ் மக்கள் வாழும் தாயக நிலப்பரப்பு இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியில் இந்து சமுத்திரத்தை ஒரு பகுதியாகவும், இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கின்ற பாக்கு நீரிணை கரையோரம் முழுவதையும் தன்னகத்தே கொண்ட ஒரு கேந்திர ஸ்தானத்தில் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் | Local Election And Tamil Political

இன்றைய உலகம் தழுவிய அரசியலிலும், சர்வதேச அரசியலிலும், பிராந்திய அரசியலிலும், இந்து சமுத்திர அரசியலிலும், இலங்கைத் தீவின் உள்நாட்டு அரசியலிலும் தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பின் கேந்திரத் தன்னைதான் தமிழ் மக்களுக்கு உள்ள பெரும்பலம்.

எனவே தமிழர்தாயக நிலத்தின் கேந்திரத் தன்மை தமிழர்களை பாதுகாப்பதற்கும், சர்வதேச உறவை வளர்ப்பதற்கும், சர்வதேச ஆதரவை பெறுவதற்குமான சாதகத் தன்மையை கொண்டுள்ளது.

இந்த சாதகத் தன்மையை எமக்குச் சார்பாக தமிழ் மக்களின் அரசியல் விடிவிக்கான வழியை திறப்பதற்கு முதலில் தமிழ் மக்கள் ஐக்கியப்பட்ட, ஒன்று திரண்ட சக்தியாய் நிற்க வேண்டும்.

இல்லையேல் எருமை கூட்டத்தை தனித்தனியாக எதிர்கொண்டு வேட்டையாடும் சிங்கத்தைப் போல பிரிந்து தனித்து நிக்கும் தமிழர்களை சிங்கள தேசம் வேட்டையாடி தமிழர் தாயகத்தை அழித்துவிடும்.

எனவே இப்போது தமிழ் தரப்புக்கு ஐக்கியமே முக்கியமானது. ஐக்கியத்துக்கூடாக கூட்டு முன்னணியை உருவாக்குவதே இப்போது தமிழர்களை பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.

இந்தக் கூட்டு முன்னணி தத்துவம் தமிழ அரசியல் பரப்பிற்கு என்றும் இல்லாதளவு இன்று அவசியமான நிர்ப்பந்தமாகவும் தோன்றியிருக்கிறது.

தலைமைத்துவ இடைவெளியை கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழ் நிரப்புவதற்கான வாய்ப்புகள் பற்றி தமிழ் புத்திஜீவிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தபோதிலும் அவர்களுடைய கருத்தியலின் தேவை இப்போது உணரப்பட்டு அது வலுவாக மேலோங்கிய இருக்கின்றது.

இந்நிலைமையிலும் கூட்டு முன்னணிச் செயற்பாட்டிற்கு செல்வதும், அதில் தொடர்ந்து பயணிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் கடினமான காரியம்தான். ஆயினும் நடைமுறைப்படுத்துவதுதான் தற்போது தமிழ அரசியலுக்கு உள்ள ஒரே ஒரு தெரிவாகும்.

இரண்டு தரப்பையும் உள்வாங்குவது 

நடந்து முடிந்தஉள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் கூட்டு முன்னணி தத்துவத்தின் தேவையை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்வதை விட தூய தேசியம் பேசுபவர்களை கூட்டு முன்னணிக்கு செல்லும்படி நிப்பந்தித்துள்ளது என்று சொல்வதே பொருந்தும்.

தமிழர் தாயகத்தில் எந்தக் கட்சியினரும் தனித்து நின்று உள்ளூராட்சி சபைகளை அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற நான்கு தரப்பும் தமக்கிடையே குறைந்தபட்ச உடன்பாடாயினும் கூடிய பட்ச ஐக்கியத்துடன் கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் | Local Election And Tamil Political

இப்போது தமிழ்த் தேசியப் பேரவையும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து கொள்கை ரீதியில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கு ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கி இருக்கிறார்கள் இது வரவேற்கத்தக்கதுதான்.

தமிழ அரசியல் பரப்பில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கொள்கை என்றும் இலட்சியம் என்றும் தாம்தான் இலட்சியவாதிகள் என்றும் சொல்லிவந்த நிலையில் இப்போது நடைமுறையில் இருக்கின்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டு தம்மை திருத்திக் கொண்டு புதிய நடைமுறைக்குச் செல்ல தயாராகி விட்டனர்.

அதனால்த்தான் இப்போது ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கி ஒப்பந்தத்திலும் கையெழுத்து விட்டு விட்டனர்.

இது ஒரு நல்ல முன்னுதாரணம்தான். ஆயினும் இந்த கூட்டு முன்னணியை தொடர்ந்து தக்க வைக்கவும், தமிழ் மக்களுக்கு நலன் பயக்கக்கூடிய வகையில் செயலாற்றுவதற்கு உயர்ந்த பட்ச பொறுமையும், உயர்ந்த பட்ச விட்டுக்கொடுப்புக்களும், நல்மன எண்ணங்களும், தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் தளரா உறுதியும் தேவையாக உள்ளது.

இந்தக் கூட்டுக்குள் ஏனைய இரண்டு தரப்பையும் உள்வாங்குவது அவசியமானது. ஆயினும் இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கூட்டுக்குள்ளேயே இந்தக் கூட்டை உடைப்பதற்கான பல சக்திகளும் இயங்கும்.

கொள்கை என்றும், தேசியம் என்றும் இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் புரியாமல் அதனுடைய நன்மை, தீமைகளை புரியாமல் ஆக்ரோஷமாக பேசும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆயினும் அவர்களும் தமிழ் தேசியத்தின் ஒரு அங்கத்தினரே என்ற அடிப்படையில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு அறிவார்ந்த கருத்தாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் தேவையாக உள்ளது.

 தோல்வி அடைந்த சமூகம்

இன்று ஐக்கிய முன்னணி உருவாக்கத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் நாளை இதனை ஏற்பார்கள் கூட்டு முன்னணிக்காக கூட்டு சேர்ந்து உழைப்பார்கள்.

தமிழ்த் தேசியப் பேரவை ஜனநாயக தேசிய கூட்டணியோடு செய்து கொண்ட உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் ஒரு சிறிய பகுதியினர் கஜேந்திரகுமார் கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டார், கொள்கை தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் | Local Election And Tamil Political

ஒரு தோல்வி அடைந்த சமூகத்தில்தான் இத்தகைய முரண் நகைகள் தோன்றும். அறிவார்ந்த கருத்தியலுக்கும் அறிவார்ந்த செயலுக்கும் எதிராக ஆயிரம் கற்கள் வீசப்படும். முட்டாள்கள் சமூகத்தின் முன்னணிக்கு வந்து பிரபலமடைவர். அவர்கள் கொள்கை என்றும், இலட்சியமென்றும் நடைமுறைக்கு சாத்தியமற்ற கற்பனாவாதங்களை முழங்கி இலட்சியத்தின் பெயரால் சமூகத்துக்குள் குழப்பங்களை விளைவிப்பர்.

இப்போது தமிழ் சமூகத்திலும் இத்தகைய குண அம்சங்கள் அதிகம் தென்படுகிறது. கொள்கை என்றால் என்னவென்று புரியாதவர்களின் இந்தக் கூச்சல்களைக் கடந்து முற்றிலும் அறிவுபூர்வமான நடைமுறைக்கு சாத்தியமான வழியை நோக்கி தமிழ் அரசியல் பயணிக்க வேண்டும்.

கொள்கை என்றால் என்ன? கொள்கை எனப்படுவது நடைமுறையில் இருக்கின்ற எதார்த்தத்திற்கு பொருத்தமாக இலக்கை அதாவது இலட்சியத்தை அடைவதற்கு கைக்கொள்ளப்படுகின்ற செயற்பாட்டு வழிதான் கொள்கை.

தேவையின் நிமித்தம் கைக்கொள்ளும் செயல் நடைமுறைதான் கொள்கையாகும். இதனை இன்னொரு வடிவில் தெளிவுபடுத்துவதாயின் தமிழ் மிதவாத அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்ற இலக்கை அதாவது இலட்சியத்தை அடைவதற்கு சாத்வீகப் போராட்டம் என்ற கொள்கையை கையில் எடுத்தனர்.

அது ஜனநாயக நடைமுறை தழுவிய அமைதி வழி போராட்டம் ஆகும்.

சாத்வீகப் போராட்டம் தோல்வியடைந்து எந்தப் பயனையும் தமிழ் மக்களுக்கு கிடைக்காததனால் தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதுதான் ஒரே இலட்சியம் என்ற இலக்கோடு ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றி. அவை தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதற்கு ஆயுதப் போராட்டம் என்ற கொள்கையை கையில் எடுத்தனர்.

அந்த கொள்கையில் கையாளப்பட்ட ஒரு வழிமுறைதான் கொரில்லா போர்முறைமை.

அது ஒரு காலகட்ட வளர்ச்சியில் மரபு வழி போர் முறைக்கு முன்னோக்கிச் சென்றது. இங்கே தமிழ்த் தரப்பினர் கொள்கைக்கும் இலட்சியத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் தத்துவார்த்த தெளிவு

முதலில் நாம் அறிவார்ந்து அரசியல் தத்துவார்த்த தெளிவிற்குச் செல்ல வேண்டும். அல்லது கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போது தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கு கூட்டு முன்னணி கொள்கை அவசியமானது. ஐக்கியம் அவசியமானது.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் | Local Election And Tamil Political

தமிழ அரசியல் பரப்பை ஐக்கியப்படுத்துவதே தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பதற்கான ஒரே கொள்கையாகும். அரசியலிலும் சரி சாதாரண வாழ்க்கையிலும் சரி பரஸ்பர நலன்களே உறவுகளை தீர்மானிக்கின்றன.

அவற்றின் அளவை நிர்ணயம் செய்கின்றன. இந்த நலன்கள் என்பது பங்குபோடல் என்பதுதான். பங்கு போடலின்றி அணுகும் அசையாது. கூட்டு முன்னணி தத்துவம் அல்லது கூட்டணி அமைத்தல் என்பதில் பங்கு போடல் என்பதே பிரதான அம்சமாகும்.

பங்குபோடல் இல்லையேல் உறவுமில்லை. அணியும் இல்லை. ஐக்கியமும் இல்லை. தேசியமும் இல்லை. அரசியலில் அனைத்தும் பங்கு போடலினால்த்தான் நிர்ணயம் செய்ய முடியும்.

ஆகவே அவரவருக்கு வழங்கப்பட வேண்டிய, அவரவருக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் பங்கிடப்பட வேண்டியது அவசியமானது.

வெறும் வாய்ப்பேச்சுக்கு தூய்மைத்துவமும், தர்ம போதனைகளும், உபதேசங்களும், இலட்சிய வாதங்களும் பேச முடியும். ஆனால் நடைமுறையில் அனைத்தும் சுயநலன்கள் சார்ந்ததும் பங்கு போடலினாலுமே நிர்ணயம் பெறும், சாத்தியமாக்கப்படும்.

வளர்ச்சியை நோக்கியதாக முன்னோக்கி செல்லும். எனவே தமிழ்த் தேசியம் பேசுகின்ற அனைவரும் ஐக்கியப்பட்டு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதன் மூலம் அரசியலில் தமக்குரிய பாத்திரத்தை சரிவர பகிர்ந்து கொள்ள முடியும்.

அதுவே தமிழர்களுக்கான அரசியலை முன்னோக்கி நகர்த்த உதவும். மாறாக ஒரு சிலரின் நலன்களை கட்சியின் நலன் என்ற மாயை தோற்றுவித்து சிங்கள தேசியக் கட்சிகளோடு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கு கூட்டி சேர்வது என்பது தாமும் தாமும் அழிந்து தமிழ் மக்களையும் அழிக்கும் செயலாகவே அமையும்.

இதை இன்னொரு வகையில் சொன்னால் மான் சிங்கத்துடன் விருந்து வைக்க கேட்கக் கூடாது. அல்லது மான் சிங்கத்தை விருந்துக்கு அழைக்கக்கூடாது.

மான் சிங்கத்தை விருந்துக்கு அழைத்தால் மான்தான் சிங்கத்துக்கு விருந்தாகிப்போகும் என்பதுதான் எதார்த்தம். இவ்வாறுதான் தமிழ் கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளுடன் கூட்டு இணைந்தால் சிங்கள தேசியக் கட்சியால் தமிழ் கட்சி விழுங்கப்பட்டுவிடும். இச் செயலின் இறுதில் தமிழர் தாயகம் சிங்கள தேசத்தால் விழுங்கப்படுவதுதான் நிகழும்.

ஆகவே தமிழ அரசியல் இன்றைய உலகளாவிய அரசியலுக்கும் சர்வதேச அரசியலுக்கும் பிராந்திய அரசியலுக்கும் உள்நாட்டு அரசியலுக்கும் முகம் கொடுக்கக் கூடியவாறு தமிழ் மக்களை ஒன்று திரண்ட சக்தியாக உருத்திரட்டுவதற்கு கூட்டு முன்னணி தத்துவம் அவசியமானது.

தமிழ் மக்களை கட்சிகளை ஐக்கியப்படுத்தி கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்காமல் தமிழ் தேசியத்தையோ தமிழர் தாயகத்தையோ இலங்கை தீவில் பாதுகாக்க முடியாது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைத்திற்கும் சாவு மணி.


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 09 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, சென்னை, India

03 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், சாவகச்சேரி கல்வயல்

25 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில்

24 Jul, 1985
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US