அளம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்களின் வீதியோட்ட நிகழ்வு
முல்லலைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று (23.02.2024) காலை ஆறு மணியளவில் வீதியோட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
நிகழ்வானது பாடசாலை முதல்வர் முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
ஆண்களுக்கான போட்டிகள்
நிகழ்வில் ஆண்களுக்கான போட்டியானது சிலாவத்தை சந்தியில் ஆரம்பமாகி பாடசாலைக்கு முன்பதாக நிறைவுபெற அதனை முல்லை வலய உடற்கல்வி ஆலோசகர் கோரஸ் டிலான் ஆரம்பித்து வைத்தார்.
ஆண்களுக்கான போட்டியில் முதலிடத்தினை விமலராசா வினுஸ்ரனும் இரண்டாமிடத்தினை பிரபாகரன் கர்ஜியனும் மூன்றாமிடத்தினை சிறிகாந் கௌசிகனும் வசப்படுத்தியுள்ளனர்.
பெண்களுக்கான போட்டிகள்
பெண்களுக்கான போட்டியானது உடுப்புக்குளம் சுவாமி தோட்டம் முன்பதாக ஆரம்பமாகி பாடசாலையில் நிறைவுற்றதுடன் இப்போட்டியினை பாடசாலையில் முன்னைநாள் முதல்வர் அல்பிரட் ஆரம்பித்து வைத்தார்.
பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை நிசங்கறூபன் ஜஸ்மின் ராகவியும் இரண்டாமிடத்தினை லெனின் நெல்சன் வினோயினியும் மூன்றாமிடத்தினை சூரியகுமார் விதுசாவும் வசப்படுத்தி சாதனையினை நிலை நாட்டியிருந்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ,முன்னைநாள் அதிபர் , ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து போட்டியில் பங்குகொண்ட வீர வீராங்கனைகளுக்கு உற்சாகத்தினையும் ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.
மருத்துவ உதவி
போட்டி நிகழ்வின் போது மருந்துவ உதவியினை அளம்பில் ஆதார வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் வழங்கியுதவினார்கள்.
களைப்புற்று வருகின்ற வீர வீராங்கனைளுக்கான தண்ணீர் வசதியினை விசேட ஏற்பாட்டில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக்கழகத்தினரும் மற்றும் அளம்பில் 24 வது சிங்க இராணுவ படை முகாமினரும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், போட்டியில் ஏராளமான வீர வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்குபற்றியதுடன் அதிகளவானோர் மனமகிழ்ச்சியுடன் போட்டியினையும் நிறைவுசெய்திருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |