சாஹிரா கல்லூரியால் நடத்தப்படும் மாபெரும் 7s ரக்பி போட்டி
சாஹிரா கல்லூரி ரக்பியினை ஆரம்பித்து 100 ஆண்டுகளை நினைவுகூரும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7s ரக்பி போட்டியை நடாத்த உள்ளது.
சாஹிரா ரக்பி 7s இற்காக 16 பாடசாலைகள் மார்ச் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் போட்டியிட உள்ளன.
போட்டித்தொடரில் 16 பாடசாலைகள் பங்கேற்க இருப்பதோடு, ரக்பியில் வேகமான அதிரடி மற்றும் உற்சாகத்திற்காக கொண்டாடப்படும் 7s வடிவத்தை இந்த போட்டித்தொடர் தழுவ இருக்கின்றது.
ரக்பி ஆர்வலர்கள்
பங்கேற்கும் 16 பாடசாலைகளாக சாஹிரா கல்லூரி கொழும்பு, ரோயல் கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரி, கண்டி டிரினிட்டி கல்லூரி, வெஸ்லி கல்லூரி, இசிபதன கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி கண்டி, கண்டி தர்மராஜா கல்லூரி, கண்டி ஸ்ரீ சுமங்கலா கல்லூரி. புனித அலோசியஸ் கல்லூரி, காலி, புனித தோமஸ் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, மகாநாம கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, மலியதேவ கல்லூரி, குருநாகல், லும்பினி கல்லூரி போன்றவை பங்கு பற்ற உள்ளன.
மேலும், ஏசியா ரக்பி (ASIA RUGBY), ஸ்ரீ லங்கா ரக்பி (Sri Lanka Rugby), ஸ்ரீ லங்கா ஸ்கூல்ஸ் ரக்பி வுட் போல் அசோசியேஷன் (Sri Lanka Schools Rugby Football Association) (SLSRFA) இணைந்து நடாத்தப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகளாக ஆண்டுக்கு ரூ.2,500,000 ஒதுக்கப்படும்.
இந்நிலையில், கொழும்பு சாஹிரா கல்லூரி, இலங்கையின் ரக்பி ஆர்வலர்களுக்கு அடுத்த தலைமுறை இலங்கை ரக்பி திறமைகளின் வெளிப்பாட்டைக் காண எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறது.
களத்தில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தத்தமது பாடசாலைகளை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவதை ஆதரிக்கவும் உற்சாகப்படுத்தவும் உங்களை அழைக்கிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |