ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாது செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் கோரிக்கை
ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று(05.12.2023)கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
5ம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதையடுத்து 99% தாய்மார்களும் பிள்ளைகளும் மன ரீதியாக பாதிப்பக்குள்ளாகியள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
புலமைப்பரிசில் பரீட்சை
புலமைப்பரிசில் பரீட்சை எழுத முடியாத நிலையிலேயே பிள்ளைகளுக்கு வினாத்தாள்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாது செய்ய வேண்டும்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டடேன்.
பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் எட்டு வருடங்கள் வரை கூட பரீட்சை கிடையாது.
இந்நிலையில், ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |