ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் சிலவற்றுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வீதி வரை இன்று (05.12.2023) நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் சிலவற்றால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற நுழைவு வீதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு போராட்டத்தினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |