இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மோசடிகள் : சிக்கித் தவிக்கும் மக்கள்

Central Bank of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Benat Dec 05, 2023 05:14 AM GMT
Report

அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது மக்களுக்கு கடினமாக உள்ளது. அவர்களுக்கு பல்வேறு சட்டவிதிகள் உள்ளன. அதனால்தான் பெரும்பாலும் இவ்வாறான நுண்கடன் நிறுவனங்கள் மூலம் மக்கள் கடன் பெறுகிறார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிக்குப் பதிலாக, நுண்கடன் நிறுவனங்களை கண்காணிக்கவென்று தனியான நிறுவனம் ஒன்று நிறுவப்பட வேண்டும். நுண்நிதி நிறுவனங்களில் பாரதூரமான மோசடிகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீதி அமைச்சிற்கு 21 நிறுவனங்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் சட்ட அமுலாக்கம், சட்ட மறுசீரமைப்புப் பணிகள் உட்பட பல்வேறு துறைகள் அடங்குகின்றன. இந்நாட்டு நீதிமன்றங்களில் 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. நீதிமன்றங்களில் உள்ள இந்த வழக்குகள் தாமதமாகாமல் இருக்க கடந்த காலங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மோசடிகள் : சிக்கித் தவிக்கும் மக்கள் | Sri Lanka Loans 

சில வழக்குகளுக்குத் தீர்வு காண இணக்க சபைகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்க்க உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் மிகவும் காலாவதியான சட்டக் கட்டமைப்பே உள்ளது.

எனவே, ஒரு குற்றவியல் வழக்கை நிறைவுசெய்வதற்கு அதிக காலம் எடுக்கின்றது. குற்றவியல் வழக்குகளில் ஏற்படும் காலதாமதம் ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளது.

அந்த வழக்குகள் தாமதமாவதால் யாருக்கும் நீதி கிடைக்காது. இதனால், இரு தரப்பினரையும் சமரசம் செய்து, குறைந்த தண்டனையுடன் வழக்கை நிறைவு செய்ய வாய்ப்புள்ளது. இது அனைவருக்கும் பயனளிக்கிறது.

குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சில அபிவிருத்தி அடைந்த நாடுகளில், சிறிய குற்றம் புரிபவர்கள் சிறையில் அடைக்கப்படுவதில்லை.

கொழும்பில் அபார சாதனை படைத்த தமிழ் சிறுவன்: வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் - நாடாளுமன்றில் அறிவிப்பு(Video)

கொழும்பில் அபார சாதனை படைத்த தமிழ் சிறுவன்: வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் - நாடாளுமன்றில் அறிவிப்பு(Video)

பெரும்பாலானவர்கள் தங்கள் செய்யாத தவறுக்காக சிறைக்கு செல்கிறார்கள். சமூகத்தின் தவறுகளால் சிலர் சிறைக்குச் செல்கிறார்கள். இதனால் அவர்களை பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தில் சுமார் 14,000 முறைப்பாடுகள் உள்ளன. இந்த அமைச்சை நாங்கள் பொறுப்பேற்ற போது 62 முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இன்றைய நிலவரப்படி 4795 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நுண்நிதிக் கடன்களால் சிக்கலை எதிர்நோக்கும் மக்கள்  

நீதித்துறை செயல்முறையை மேலும் வலுப்படுத்தவும் செயற்திறன்மிக்கதாகவும் மாற்றும் வகையில் எட்டு புதிய சட்ட மூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 'நல்லிணக்க' சங்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மோசடிகள் : சிக்கித் தவிக்கும் மக்கள் | Sri Lanka Loans  

அந்த 'நல்லிணக்க சங்கத்தில்' அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அந்த நல்லிணக்க சங்கங்களின் பணிகள் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், உயரதிகாரிகள், மதத் தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடனே இடம்பெறும். கிராமத்திற்கு வீதி அமைக்கவும், மின்சாரம் வழங்கவும் அரசியல்வாதிகள் தேவை இல்லை.

இன்று எல்லோரும் நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய பல்வேறு காரணிகள் உள்ளன. யுத்தத்தினால் நாடு இழந்த உயிர்களும் உடமைகளும் அதிகம். அதேபோன்று, நீதிமன்றங்கள், பேருந்துகள் மற்றும் மின்மாற்றிகள் ஜே.வி.பியினால் எரித்து நாசமாக்கப்பட்டன. அவற்றை எரித்து அழிக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டின் பொருளாதார நிலை வேறுவிதமாக இருந்திருக்கும்.

நுண்நிதி நிறுவனங்கள் இந்த நாட்டிற்கு பெரிய புற்றுநோயாக மாறியுள்ளன. அவை தொடர்பில் எந்தவித சட்டமோ கண்காணிப்பு முறைகளோ இல்லை. மத்திய வங்கியில் கூட பதிவு செய்யப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது மக்களுக்கு கடினமாக உள்ளது.

அவர்களுக்கு பல்வேறு சட்டவிதிகள் உள்ளன. அதனால்தான் பெரும்பாலும் இவ்வாறான நுண்கடன் நிறுவனங்கள் மூலம் மக்கள் கடன் பெறுகிறார்கள்.

மத்திய வங்கிக்குப் பதிலாக, நுண்கடன் நிறுவனங்களை கண்காணிக்கவென்று தனியான நிறுவனம் ஒன்று நிறுவப்பட வேண்டும்.

நுண்நிதி நிறுவனங்களில் பாரதூரமான மோசடி கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் சுமந்திரன் யாழ்.செல்ல முடியுமா! விஜயதாச ராஜபக்ச கேள்வி(Video)

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் சுமந்திரன் யாழ்.செல்ல முடியுமா! விஜயதாச ராஜபக்ச கேள்வி(Video)

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:இன்று முதல் கிடைக்கவுள்ள கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:இன்று முதல் கிடைக்கவுள்ள கொடுப்பனவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US