தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல..! மலையக மக்களுக்கான திட்டங்கள் குறித்து கிருஷ்ணன் கலைச்செல்வி உறுதி

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government Budget 2027
By Malaivanjan Nov 25, 2026 08:43 PM GMT
Report

மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று(25.11.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் அசோக கருணாரத்ன ஆகியோர் குறித்த ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியிலும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதுடன், மக்களுக்கு வழங்கிய “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக, 203 வருடகால வரலாற்றைக் கொண்ட மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். கடந்த காலங்களில் மலையக மக்களின் சம்பள உயர்வு, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்தன.

தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல..! மலையக மக்களுக்கான திட்டங்கள் குறித்து கிருஷ்ணன் கலைச்செல்வி உறுதி | Schemes For The Hill Country People

இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடும் அணுகுமுறையே நீடித்து வந்தது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளுடன் நின்றுவிடாமல், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நடைமுறை வேலைத்திட்டங்கள் ஊடாக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு

இதன் ஒரு பகுதியாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பாக 200 ரூபாவும், அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து மேலும் 200 ரூபாவும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல..! மலையக மக்களுக்கான திட்டங்கள் குறித்து கிருஷ்ணன் கலைச்செல்வி உறுதி | Schemes For The Hill Country People

இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக மேலும் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு ஒரு வருடத்துடன் முடிவடையும் என சில மலையக அரசியல்வாதிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கும் அரசாங்கம் தனது அடுத்தகட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாகப் பதிலளித்துள்ளது.

கடந்த காலங்களில் சிறிய சம்பள உயர்வைக்கூடப் பெற்றுக்கொள்வதற்காகத் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது. அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் நேரடியாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

1,300 வீடுகள் கட்டுவதற்கான வேலைத்திட்டம்

மேலும், தோட்டங்களில் பணியாற்றும் பெண்களின் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலசலகூடம், தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்காக 3,000 மில்லியன் ரூபாவும், தேயிலைத் துறையின் அபிவிருத்திக்காக 13,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக 30,000 மில்லியன் ரூபாவும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 8,500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல..! மலையக மக்களுக்கான திட்டங்கள் குறித்து கிருஷ்ணன் கலைச்செல்வி உறுதி | Schemes For The Hill Country People

சுகாதாரத் துறைக்காக 700 மில்லியன் ரூபாவும், வீடமைப்புத் திட்டங்களுக்காக 2,800 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் 1,300 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக மாவட்டச் செயலகத்தின் ஊடாக 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.  

பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த கனடா கந்தசுவாமி ஆலய பக்தர்களின் நெகிழ்ச்சி செயல்

பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த கனடா கந்தசுவாமி ஆலய பக்தர்களின் நெகிழ்ச்சி செயல்

தமிழ் வைத்தியரை சந்திக்க முயற்சிக்கும் கோட்டாபய

தமிழ் வைத்தியரை சந்திக்க முயற்சிக்கும் கோட்டாபய


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US