தமிழ் வைத்தியரை சந்திக்க முயற்சிக்கும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான வழக்கு இன்றையதினம்(25.11.2026) நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக எடுத்துக் கெள்ளப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான கோரிக்கை தொடர்பாகவே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும், கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற வேண்டிய வைத்தியர் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரைதான் அந்நாட்டில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் சிவதாசன் எனவும் அவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....