ஏடன் வளைகுடாவில் இருந்து பயணப் பாதையை மாற்றிய சவூதி எண்ணெய் தாங்கிகள்
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள் ஏடன் வளைகுடாவில் தங்கள் பயணப் பாதையை மாற்றி தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆசியாவில் இருந்து வெறுமனே திரும்பிய இந்த தாங்கிகள், பப் எல்-மந்தேப் நீரிணை வழியாகச் செங்கடலைக் கடப்பதற்குப் பதிலாக, தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளதாக எல்.எஸ்.இ.ஜி மற்றும் மரைன் டிராபிக் ஏ.ஐ.எஸ் (AIS) கப்பல் கண்காணிப்புத் தகவல்கள் காட்டுகின்றன.
சவூதி அரேபியாவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர் எச்சரித்ததைத் தொடர்ந்து, செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் விலை
சவூதி கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் மீதான முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹூதி இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்திலான புதிய பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.