சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகம் மாணவர்களிடம் கையளிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகம் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு சவூதி அரேபியாவிடமிருந்து ஏறக்குறைய 15 பில்லியன் ரூபா நிதியும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து சுமார் 2.876 பில்லியன் ரூபா நிதியும் கிடைத்துள்ளது.
மருத்துவ பீட வளாகம்
20 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த வளாகத்தில் 500 மாணவர்களுக்கான தங்கும் விடுதி வசதிகள், 1060 இருக்கைகள் கொண்ட கலையரங்கம், ஆறு விரிவுரை மண்டபங்கள், நிர்வாகக் கட்டிடங்கள், நூலகம், சிற்றுண்டிச்சாலை, பணியாளர் தங்குமிடம் மற்றும் ஆரம்ப மருத்துவ வசதிகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
தற்போது இந்தப் பீடத்தில் சுமார் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர், மேலும் ஆண்டுதோறும் சுமார் 160 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காகச் சேர்க்கப்படுகின்றனர்.

இலங்கையின் மருத்துவக் கல்வி முறையை வலுப்படுத்துவதிலும், தரமான சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் இந்த புதிய வளாகம் ஒரு முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்று பிரதமர் ஹரிணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தசம் அல்கஹ்தானி மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.